search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகிலா தனஞ்ஜெயா"

    இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்ஜெயா தனது பந்து வீச்சு முறையை சரி செய்ததால் ஐசிசி அனுமதி அளித்துள்ளது. #ICC
    இலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா பந்து வீசும் முறையில் சந்தேகம் இருப்பதாக கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டின்போது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் சர்வதேச போட்டியில் பந்துவீச தடை விதிக்கப்பட்டது.

    மேலும் அவர் தனது பந்து வீச்சு முறையை மாற்றி நிரூபிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி அவரது பந்து வீச்சு சென்னையில் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதன் அறிக்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.) கொடுக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த ஐசிசி தனஞ்ஜெயா சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீச அனுமதி அளித்துள்ளது.
    இலங்கை சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்ஜெயா பந்து வீச ஐசிசி தடைவித்துள்ளது. தடை தற்போதில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. #ICC
    இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா. இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார். அப்போது அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனால் தனஞ்ஜெயா இன்னும் 14 நாட்களுக்குள் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஐசிசியின் ஆய்வு முடிவு வெளிவரும் வரை சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார் என்று ஐசிசி தெரிவித்திருந்தது.



    இந்நிலையில் அவரது பந்துவீச்சு பரிசோதனையில் ஐசிசி விதிமுறைக்கு மாறாக பந்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் பந்து வீச தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்தது.

    அகில தனஞ்ஜெயா இலங்கை அணிக்காக 5 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 27 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 46 விக்கெட்டும், டி20-யில் 14 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
    இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஜோ ரூட்டின் அபார சதத்தால் இங்கிலாந்து 278 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பல்லேகெலேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலி்ல் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்கள் சேர்த்தது. பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கருணாரத்னே (63), தனஞ்ஜெயா டி சில்வா (59), ரோஷென் சில்வா (85) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 336 ரன்கள் குவித்தது.

    இதனால் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 46 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 46 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவதற்கு ஒரு ஓவர் மட்டுமே இருந்ததால் ஜேக் லீச் தொடக்க வீரராக ரோரி பேர்ன்ஸ் உடன் களம் இறங்கினார்.

    நேற்றைய 2-வது நாளில் இங்கிலாந்து ரன்ஏதும் எடுக்கவில்லை. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. லீச் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரோரி பேர்ன்ஸ் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    ஜென்னிங்ஸ் 26 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய ஜோ ரூட் 146 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 124 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் (0), ஜோஸ் பட்லர் (34), மொயீன் அலி (10), சாம் குர்ரான் (0), அடில் ரஷித் (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.


    தனஞ்ஜெயா

    விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் அரைசதம் அடிக்க, இங்கிலாந்து 76 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் எடுத்திருக்கும்போது வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. பென் போக்ஸ் 51 ரன்னுடனும், ஆண்டர்சன் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். அகிலா தனஞ்ஜெயா 6 விக்கெட் வீழ்த்தினார்.

    இங்கிலாந்து தற்போது வரை 278 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்னும் 22 ரன்கள் அடித்தால் 300 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்கு நிர்ணயித்தால் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.
    இலங்கை சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்ஜெயா பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இதனால் பரிசோதனைக்கு உட்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. #ICC
    இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா. இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தனஞ்ஜெயா இன்னும் 14 நாட்களுக்குள் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஐசிசியின் ஆய்வு முடிவு வெளிவரும் வரை சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது.
    கொழும்பில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 178 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடையச் செய்தது இலங்கை. #SLvSA
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இலங்கை, கேப்டன் மேத்யூஸ் (97), டிக்வெல்லா (43) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்தது.

    பின்னர் 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. டி காக்கை (54) விட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற தென்ஆப்பிரிக்கா 24.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக் 121 ரன்னில் சுருண்டது.



    சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா 9 ஓவரில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் அள்ளினார். இதனால் தென்ஆப்பிரிக்கா 178 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதல் மூன்று போட்டிகளையும் தென்ஆப்பிரிக்கா வென்றதால் 3-2 எனத் தொடரை கைப்பற்றியது.
    ×